41 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது ரணிலின் திட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான இறுதி வாக்கெடுப்பு 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று (13.12.2023) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கு எதிராக 81 வாக்குகள் அளிக்கப்பட்டன.
மேலும் இந்த வாக்கெடுப்பிலிருந்து யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக 2024 ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
வரவு - செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகிய எம்.பிக்கள் எதிராக வாக்களித்தனர். ஏனைய 7 எம்.பிக்களும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்புக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 81 வாக்குகளும் வழங்கப்பட்டன.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில் மாலை 6.40 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வரவு - செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்ததுடன், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எதிர்த்து வாக்களித்தது.
தேசிய மக்கள் சக்தியும் எதிராகவே வாக்களித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகிய எம்.பிக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
ஏனைய 7 எம்.பிக்களும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகிய எம்.பிக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாகவே வாக்களித்தது.
அண்மையில் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரொஷான் ரணசிங்க, வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராகவே வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இரண்டாம் வாசிப்பைப் போன்று மூன்றாம் வாசிப்பையும் ஆதரித்து வாக்களித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam
