யாழ். இணுவில் பகுதியில் சங்குக்கூட்டணியின் மே தின நிகழ்வு
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் (சங்குக் கூட்டின்) மே தினக் கூட்டம் யாழ். இணுவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் 'ஸ்ரீலங்கா அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்' என்ற தலைப்பில் நடைபெற்றது.
இந்த கூட்டம் நேற்றைய தினம்(01.05.2026) இடம்பெற்றது.
சுவீடனில் கண்டெடுக்கப்பட்ட ஆபத்தான மர்மப்பொருள்! வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
கலந்துகொண்ட உறுப்பினர்கள்
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., சமத்துவக் கட்சி மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளை ஒன்றிணைந்து இந்த மே தினக் கூட்டத்தை நடத்தினர்.
[DDQ07N ]
இதன் போது, நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினரான ப.கஜதீபன், ஜனநாயகப் போராளிகள் கட்சியைச் சேர்ந்த வேந்தன், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri