மீண்டும் அதிகரிக்கப்படும் மின் கட்டணம்..! வெளிவந்துள்ள தகவல்
மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (01.05.2026) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மின் கட்டண அதிகரிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், மின் கட்டணம் குறைக்கப்படும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும், எதிர்வரும் 10ஆம் திகதியளவில் மீண்டும் 11 சதவீதத்தினால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்ற ஊழலால் ஏற்பட்ட 18 பில்லியன் ரூபா இழப்பை, மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளது.

மறைமுக வரிகள்
எனினும், அரசாங்கம் அதனை மறைமுக வரிகள் மூலம் மக்களிடமே வசூலிக்கத் தயாராகி வருகிறது. அதற்கமைய, இந்த மாதம் 10 ஆம் திகதியளவில் மின்சாரக் கட்டணத்தை மீண்டும் 11 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், உணவு, மருந்து மற்றும் விவசாய உபகரணங்களுக்கான வட் வரியை நீக்குவதாகக் கூறிவிட்டு, நடைமுறையில் சமூகப் பாதுகாப்பு வரியுடன் சேர்த்து சுமார் 22 வீதம் வரை வரி வசூலிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போன டொலர்கள்: ஜனவரியிலேயே தோன்றிய அபாய அறிகுறிகள் - வரி செலுத்துவோர் தலையில் விழப்போகும் பேரிடி..!
you may like this
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam