அரவிந்த டி சில்வாவை கைது செய்ய பிடிவிராந்து உத்தரவு
முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன இன்று பிறப்பித்துள்ளார்.
ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் விமான கொள்வனவு தொடர்பான விசாரணையில் சந்தேகநபராக உள்ள பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்கு வழங்கப்பட்ட பிணையில், அரவிந்த டி சில்வாவும் அவரது மனைவியும் பிணையாளர்களாக கையெழுத்திட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியங்கா நியோமாலி நீதிமன்றத்தில் முன்னிலையாகாததைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
இதனையடுத்து, அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி தங்களது பிணையாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் கோரியிருந்தனர்.
அவர்கள் வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதாக அவர்களது சட்டத்தரணி முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் தொடர்புடைய பிணைப் பத்திரத்தின் பெறுமதி 2 கோடி ரூபா என நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
பிணைத் தொகையைப் பறிமுதல் செய்வதற்கு முன்னர் விளக்கம் அளிக்க இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
அரவிந்த டி சில்வாவின் தாயார் காலமாகி இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் நடைபெறவுள்ள நிலையில் அரவிந்த மற்றும் அவரது மனைவி நீதிமன்றில் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயத்தை அரவிந்த மற்றும் அவரது மனைவியின் சட்டத்தரணி நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திரும்பப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது இவ்விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருமாறு நீதவான் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! கடைசி நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கடிதம் - ஏற்பட்டுள்ள சிக்கல்