சுவீடனில் கண்டெடுக்கப்பட்ட ஆபத்தான மர்மப்பொருள்! வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
தெற்கு சுவீடனின் மால்மோ நகரில் சந்தேகத்திற்கிடமான மர்மப்பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அங்குள்ள பல வீதிகளை நேற்று பொலிஸார் முடக்கியுள்ளனர்.
குறித்த பொருள் வெடிக்கக்கூடிய அபாயம் கொண்டதாகக் கருதப்படுவதால், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அவசர வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் தீவிர விசாரணை
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தேசிய வெடிகுண்டு தடுப்புப்பிரிவினர் வரவழைக்கப்பட்டு, அந்த பொருளை ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், மால்மோ நகரின் முக்கியப் பகுதிகளில் உள்ள உணவகங்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்புக் கருதி வெளியே வர வேண்டாம் என பொலிஸார் தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்த பாதுகாப்பு நடவடிக்கையினால் அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த மர்மப்பொருள் என்ன என்பது குறித்தும், அதன் பின்னணி குறித்தும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri