முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்காக அழைப்பு

Sri Lankan Tamils Tamils Tamil
By Thevanthan May 15, 2025 10:55 AM GMT
Thevanthan

Thevanthan

in சமூகம்
Report

தமிழினப் படுகொலையைச் சித்தரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக நேற்று(14) காலை ஊர்திப்பவனியொன்று ஆரம்பமாகியது.

குறித்த ஊர்தியானது, இன்று கிளிநொச்சிக்கு வந்திருந்தது.பரந்தன், கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தரித்து மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஊர்திப்பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் நடைபெறவுள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் பொன் விழா

பிரான்ஸில் நடைபெறவுள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் பொன் விழா

ஊர்திபவனி

குறித்த ஊர்திபவனி வடக்கை சேர்ந்த ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.

"தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும், தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் இறுதி போரின் சாட்சியங்கள் குறித்த வாகனத்தில் காட்சி படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வாகனபவனி மாவட்டம் தோறும் வீதிகளில் பயணிக்கும் போது பொதுமக்கள் அஞ்சலி செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்காக அழைப்பு | May 18 Mullivaikal Memorial Day

மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஆனையிறவு உப்பு விவகாரம்

மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஆனையிறவு உப்பு விவகாரம்

தமிழினப் படுகொலை

எதிர்வரும் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாளில் முள்ளிவாய்க்காலின் உயிரிழந்த உறவுகளுக்கான நீத்தார் திருச்சிக்கு (இறந்தவர்களுக்கான ஆத்ம சாந்தி பிராத்தணை) இடம்பெறவுள்ளதாகவும் இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்காக அழைப்பு | May 18 Mullivaikal Memorial Day

 இது தொடர்பாக இன்று (15) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கருத்து தெரிவித்த அகில இலங்கை சைவ தமிழ் மன்றத்தின் செந்தமிழ் ஆகம அருச்சுனைஞர்கள் சிவத்திரு ந.குணரட்ணம் மற்றும் சிவத்திரு இ. றமேஸ்குமார் ஆகியோர் இந்த அழைப்பை விடுத்தனர்.

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்! தாயிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்! தாயிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள்

கஞ்சி வழங்கும் நிகழ்வு 

யாழ் பல்கலைக்கழக சமூகம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை (15) மதியம் மன்னார் நகர பேருந்து நிலைய பகுதியில் இடம்பெற்றது.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்காக அழைப்பு | May 18 Mullivaikal Memorial Day

எம்மவர்களின் வலி நிறைந்த வரலாற்றை அடுத்த சந்ததியினருக்கும், இளைய தலைமுறையினருக்கும் கடத்தும் கடமை பல்கலைக்கழக மாணவர்களாகிய தமது பொறுப்பு என அவர்கள் தெரிவித்து குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

இதன் போது குறித்த பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி காய்ச்சப்பட்டு மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

மே-12 ஆம் திகதி தொடக்கம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை யாழ் பல்கலைக்கழக சமூகம் முள்ளிவாய்க்கால் நினைவு வாரமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சியை நேரடியாக சென்று காய்ச்சி மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்காக அழைப்பு | May 18 Mullivaikal Memorial Day

இந்த நிலையிலே இன்றைய தினம் வியாழக்கிழமை 4வது நாளாக மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கப்பட்டதாக மன்னாரிற்கு வருகை தந்த யாழ் பல்கலைக்கழக சமூகத்தினர் தெரிவித்தனர்.

 உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சி

இந்த தமிழினப் படுகொலை வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்காக அழைப்பு | May 18 Mullivaikal Memorial Day

அந்தவகையில் தமிழினப் படுகொலை வாரத்தின் ஐந்தாவது நாளான இன்று புதுக்குடியிருப்பு கோம்பாவில் இளைஞர்களின் ஏற்பாட்டில் கோம்பாவில் கிராமத்தில் இறுதி உயிரை காப்பாற்ற உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சியானது இன்றையதினம் (15.05.2025) வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

 நினைவஞ்சலி

 முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு மூதூர் -கட்டைபறிச்சான் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (14) மாலை முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறப்பட்டதோடு, நினைவஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.

இதனை சம்பூர் -ஆலங்குளம் மாவீரர்நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்காக அழைப்பு | May 18 Mullivaikal Memorial Day

இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்காக சுடரேற்றி நினைவஞ்சலிம் செலுத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


GalleryGalleryGallery
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US