கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்! தாயிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள்
கொட்டாஞ்சேனை பகுதியில் சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான மரண விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
இன்று (15) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த விசாரணைகள் நடைபெற்றுள்ளன.
சாட்சியங்கள் பதிவு
கொழும்பு பதில் நீதவான் சம்பத் ஜெயவர்தன முன்னிலையில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை பொலிஸாரின் நடவடிக்கையின் கீழ் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதலாவதாக சிறுமி தவறான முடிவெடுத்து கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் தலைவரிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் இறந்த சிறுமியின் தாயாரிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவறான முடிவு
பின்னர், மேலும் பலரின் சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையை 22ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் சிறுமியின் தாயாரிடமிருந்து மேலதிக சாட்சியங்களைப் பதிவு செய்யவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொட்டாஞ்சேனை கல்பொத்த பகுதியில் கடந்த 29ஆம் திகதி தொடர்மாடி குடியிருப்பில் 16 வயது மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்தார்.
இந்த விடயம் பேசுபொருளாகியுள்ளதுடன், justiceforamshi என்ற வாசகமும் இணையத்தில் பரவலாக எல்லோராலும் பகிரப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 7 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
