பிரான்ஸில் நடைபெறவுள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் பொன் விழா
தமிழர் கல்வி பண்பாட்டு வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இவ்வாண்டு தனது 50ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடி வருகின்றது.
கல்வித் துறையின் நிலைமைகளைத் தாண்டி, தமிழ் மக்களின் கனவுகளுக்கும் சமூக நீதிக்கும் அடையாளமாக உருவான இந்தப் பல்கலைக்கழகம், 1974ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில், இரண்டு பீடங்களுடன் தான் தனது பயணத்தை ஆரம்பித்தது.
இன்று 13இற்கும் மேற்பட்ட பீடங்களை கொண்ட இது, உலகளாவிய தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு உயர் கல்வி மையமாக உயர்ந்துள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்தில் தமிழ் மாணவர்களுக்கான உயர் கல்வித் தேவை, அரசியல் மற்றும் சமூக சவால்கள், அடக்குமுறைகள் போன்ற தடைகளை கடந்து முன்னேறிய வரலாறு தடங்கள் என்றைக்கும் மறக்க முடியாதவை.
பிரமாண்டமான விழா
இத்தகைய போராட்டத்தின் விளைவாக தோன்றிய இந்த உயர் கல்வி நிறுவனம், இன்று உலகம் முழுவதும் பரந்து வாழும் பழைய மாணவர்களின் பெருமைமிகு அடையாளமாகவும், சமூக வளர்ச்சிக்கான நம்பிக்கையாகவும் விளங்குகிறது.
இவ்வருடம், யாழ். பல்கலைக்கழகத்தின் பொன்விழா நிகழ்வுகள், உலகின் பல பாகங்களிலும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகின்றன.
அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து மற்றும் தாயகத்தில் நிகழ்ந்த விழாக்களைத் தொடர்ந்து தற்போது, ஐரோப்பாவிலும் இந்த கொண்டாட்டம் நடைபெறுகிறது.
பிரான்ஸில் எதிர்வரும் ஜூன் 8ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழகத்தின் பொன்விழா மிகுந்த பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு, பரிஸ் புறநகர் பகுதியில் உள்ள Villeneuve-Saint-Georges நகரில் அமைந்துள்ள Espace Shine மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பிரான்ஸில் வாழும் பழைய மாணவர்கள் மட்டுமன்றி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பலர் கலந்து கொள்கின்றனர்.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள் ஐரோப்பாவில் வசித்து வருவதை கருத்தில் கொண்டு, அவர்களை ஒன்றிணைக்கும் இவ்விழா, ஒரு இனம் மற்றும் கல்வியை இணைக்கும் ஒரு புள்ளியாக அமையும் வரலாற்றுச் சிறப்பை பெறுகிறது.
இசை, நடனம், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், இரவு விருந்து போன்றவை இந்த விழாவில் இடம்பெறவுள்ளன. இராமநாதன் நுண்கலை பீடத்தின் பழைய மாணவர்கள் இந்த கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகளோடு இணைந்து ஒழுங்கமைக்கிறார்கள்.
வரலாற்றுச் சிறப்பான நிகழ்வு
யாழ். பல்கலைகழக பழைய மாணவர்களுடன், பிரான்ஸ் வாழ் பல்வேறு சமூகங்களின் கல்வி ஆர்வலர்கள், பிரதானிகளும் கலந்துகொள்ளும் வகையில் சிறப்பாக திட்டமிடப்பட்டுள்ள இப்பொன்விழா நிகழ்வு எல்லோர் மத்தியிலும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
பிரான்ஸில் வாழும் யாழ். பல்கலைக்கழக பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் மற்றும் LIFT ஆய்வு அறக்கட்டளை ஆகியோர் இந்த விழாவினை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டுள்ளார்கள்.
LIFT அமைப்பு புலம்பெயர்ந்த பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்டு வடக்கு, கிழக்கு பிரதேசத்தின் கல்வி மற்றும் சமூக வளர்ச்சிக்காக பெருமளவு பங்களித்து வரும் ஆய்வு நிதிமூலம் கொண்ட ஒரு அமைப்பாகும்.
இந்த அமைப்பு இவ்விழாவிற்கு தனது முழு ஆதரவை வழங்கியுள்ளது. நுழைவு சீட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பங்கேற்க விரும்புவோர் கீழ்க்கண்ட இலக்கங்களுடன் உடனடியாக தொடர்பு கொண்டு தமது இருக்கைகளை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jossey: 06 63 30 44 09
Rony Master: 06 29 19 28 43
Sivasri: 06 51 47 50 83
Jay: 07 82 39 14 08
நுழைவு சீட்டுகளை முன்பதிவு செய்தல் அவசியம், என்பதையும் நிகழ்வுநாள் அன்று மண்டப வாயிலில் சீட்டுகள் விற்பனை செய்யப்படமாட்டாது என்பதையும் ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், பீடம், batch, குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஒன்றாக அமர விரும்புவோர், ஒரு குழுவாக முன்பதிவு செய்வது சிறந்தது.
இதனால், ஏற்பாட்டில் சிரமங்கள் இல்லாமல் இடஒதுக்கீடு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் உயர்கல்வித் தேவைக்காக ஏற்பட்ட இந்தத் தலமையமைப்பின் பொன்விழா, பிரான்ஸில் நிகழவிருக்கும் இந்த நாள், தமிழ் சமூகத்திற்கே ஒரு வரலாற்றுச் சிறப்பான நிகழ்வாக அமையும்.
யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வி சேவையை கொண்டாட, அதன் 50 ஆண்டு சாதனைகளை நினைவுகூர, அனைவரையும் ஒன்று சேர்க்கும் இவ்விழா, இனம், கல்வி, பண்பாடு என அனைத்தையும் ஒரே மேடையில் கொண்டுவரும் ஒரு பொற்காலத்துவக்கமாகும் என்பதே பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களின் கருத்தாக இருக்கிறது.
மேலும் தகவல்களுக்கு: WhatsApp: +33 7 53 50 93 96 Email: uojfrance@gmail.com
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 7 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
