மே18 உயிர் நீத்தவர்களை நினைவு கூர்வதற்கான தினம் அல்ல : சிவசேனை அமைப்பினர் கருத்து
முள்ளிவாய்க்கால் (Mullivaikal) நினைவு தினத்தை இந்து சமய முறைப்படி இறந்தவர்களின் சிரார்த்த தினத்திலேயே செய்ய வேண்டும் என்பதோடு மே18ஆம் திகதி அதற்கான தகுந்த தினமல்ல என சிவசேனை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண (Jaffna) ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் கூறுகையில்,
“மே18 அன்று நினைவேந்தல் நாள் என்று ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.
இதை சைவ மக்களின் மீது செலுத்தி சைவ மக்களின் சிரார்த்த தினத்திற்கு நினைவேந்தல் என்று மற்றொரு பெயரையும் சூட்டி அனுஷ்டிப்பதை நாங்கள் ஏற்றக் கொள்ள முடியாது.
சிரார்த்தம் என்று சொன்னால் இறந்த ஆன்மாக்களுடைய சாந்திக்காக மிகச் சிரத்தையோடு செய்கின்ற செயல். அவ்வாறு நாங்கள் செய்வதாக இருந்தால் இதை நாம் மே 18இல் மேற்கொள்ள முடியாது.” என்றும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |