தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு சிலை திறப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் நினைவுச்சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.
மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று சனிக்கிழமை காலை திறந்து வைக்கப்படவுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வுகள்
மாவை சேனாதிராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டே இந்தச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.

நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி, யாழ். இந்திய துணைத் தூதர் சாய் முரளி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், ஞானமுத்து சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், பத்மநாதன் சத்தியலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மறுவன் புலவு சச்சிதானந்தம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள், மாவை சேனாதிராசாவின் குடும்பத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.
நினைவுப் பேருரைகளைத் தொடர்ந்து மாவை சோ.சேனாதிராஜாவின் முதலாமாண்டு நினைவுமலர், பேராசிரியர் பாஞ்.இராமலிங்கம் எழுதிய 'ஈழ அண்ணல் சோ.மாவை சேனாதிராஜா' ஆகிய இரு நூல்களும் வெளியிடப்படவுள்ளன.
மேலதிக தகவல் - தீபன்


இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri