யாழில் திறந்து வைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் நல்லூரில் திறந்து வைக்கப்பட்டது.
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று வெள்ளிக்கிழமை (21) ஆரம்பமாகியுள்ளது.
பலரும் பங்கேற்பு
இதனையொட்டி யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இன்று மாலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

இதன்பொழுது பொதுச்சுடரினை மாவீரர்களின் உறவினர் ஒருவர் ஏற்றிவைத்து மலரஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து பலரும் மலரஞ்சலி செலுத்தினர்.
மாவீரர்களின் பெற்றோர், முன்னாள் போராளிகள், அரசியல் பிரதிநிதிகள் , உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







