ஈழத்தமிழர்களுக்கு மாவையின் மறைவு பேரிழப்பு: வைகோ அறிக்கை
ஈழத்தமிழர் விடுதலை என்பது நிறைவு பெறாத போராட்டமாக இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும் சங்கடங்களும், சவாலும் நிறைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் மாவை சேனாதிராஜாவின் மறைவு ஈழத்தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் என திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மறைவு தொடர்பில் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பான அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஈழத் தமிழ் மக்களின் உரிமை
“ஈழத் தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க வாழ்நாள் முழுவதும் போராடிய மாவை சேனாதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக தன் 82 ஆம் வயதில் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் நேற்று இயற்கை அடைந்தார் என்ற செய்தி ஆறா துயரை அளிக்கிறது.

இலங்கை பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், சிறு வயதிலேயே தமிழ் ஈழ விடுதலைக்காக ஓங்கிக் குரல் கொடுத்தார்.
ஈழத்தின் தந்தை செல்வா அவர்களை நிறுவனராகக் கொண்ட தமிழரசு கட்சி நடத்திய சத்தியாகிரக போராட்டத்தில் 1961 ஆம் ஆண்டில் முதன் முதலாகக் களம் இறங்கி போராடினார்.
என் மீது அளவு கடந்த பாசமும், நட்பும், தோழமையும் கொண்டிருந்த அவர், பலமுறை எங்கள் வீட்டில் சந்தித்து விருந்துண்டு அன்பினை வெளிப்படுத்தியுள்ளார்’’ என்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam