பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டிகளில் ஆட்ட நிர்ணயச் சதி : கிரிக்கெட் தலைமையகத்தில் தேடுதல்
அண்மையில் நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் (பிபிஎல்) பருவப்போட்டிகளில் ஆட்ட நிர்ணயச் சதி நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மிர்பூரில் அமைந்துள்ள, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைமையகத்துக்குள் ஊழல் தடுப்பு அதிகாரிகள் தேடுதல் நடத்தியுள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டின் கீழ், சந்தேகத்திற்கிடமான நடத்தை குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, ஆரம்பித்த விசாரணையின் பின்னணியில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சுயாதீன விசாரணைக் குழு
இந்த விசாரணைக்காக, ஊழல் தடுப்பு பிரிவுக்கு உதவ மூன்று பேர் கொண்ட சுயாதீன விசாரணைக் குழுவையும் பங்களாதேஷ் கிரிக்கட் சபை அமைத்துள்ளது.
மேன்;முறையீட்டு நீதிமன்றின் முன்னாள் நீதியரசர் மிர்சா ஹசைன் ஹைதர், தேசிய கிரிக்கெட் வீரர் சகில் காசெம் மற்றும் சர்வதேச சட்டத்தரணி கலீத் எச். சவுத்ரி ஆகியோர் அந்த குழுவில் அடங்கியுள்ளனர்.
2013இற்குப் பின்னர், பிபிஎல் ஊழல் தொடர்பாக முறையான விசாரணை ஒன்று நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்தநிலையில், எட்டு உள்ளூர் மற்றும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் மீது குறித்த ஆட்ட நிர்ணய சதிக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான நோ-போல்கள் என்ற முறையற்ற பந்துவீச்சுக்கள், அசாதாரண துடுப்பாட்ட சரிவுகள் மற்றும் கேள்விக்குரிய அணித் தேர்வுகள் போன்றவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
