மாதவனை - மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரம்! மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
மாதவனை - மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில் பண்ணையாளர்கள் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக மட்டக்களப்பில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக மயிலத்தமடு மாதவனை பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கிச்சூடும், வெட்டுக்காயங்களுடனும் கால்நடைகள் இறந்துள்ள நிலையில் தங்களுக்கும் உயிர் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர் .
கடந்த காலங்களாக மாதவனை மயிலத்தமடு பகுதியில் மேய்ச்சல் தரை விவகாரம் சிங்களவர்களின் அத்துமீறிய குடியேற்றம் பேசுபொருளாக இருந்த நிலையில் தற்போது அது மீண்டும் தலை தூக்கியுள்ளது.
மாதவனை, மயிலத்தமடு பகுதியில் சிங்களவர்கள் அத்துமீறி குடியேற முடியாத நிலையில் நீதிமன்றத் தடை உத்தரவு இருக்கின்ற நிலையிலும் குறித்த பகுதியில் பெரும்பான்மை இனத்தவர்களினால் சோளன் , கச்சான் பயிர்செய்கை மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்ற சட்டத்தை மதிக்காமல் செயற்பட்டு வருவதாக கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயிர்செய்கையில் ஈடுபடுபவர்கள் மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட காணிகளுக்குள் அத்துமீறி பயிர்செய்வதனால் கால்நடைகள் அப்பகுதியில் போகும் போது கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடும் வெட்டுக்காயங்களுடனும்,கால் நடைகள் உயிரிழந்துள்ளன.
கடந்த காலங்களில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராஜா ஜகம்பத் தலைமையில் குறித்த குடியேற்றமானது திட்டமிட்டு திணிக்கப்பட்டிருந்த போதிலும் பண்ணையாளர்களின் முயற்சியாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்குபெற்றளுடனும் வழக்கு தொடரப்பட்டு சிங்கள குடியேற்றத்திற்கான தடை உத்தரவு எடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் இன்று மீண்டும் வெளிமாவட்டங்களில் உள்ள பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அப்பகுதி மக்கள் மட்டக்களப்பில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
