புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்: அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு
2026 ஆம் ஆண்டுக்காக 350,000 வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள இலங்கை தனது இலக்கை நிர்ணயித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றவர்களின் மொத்த எண்ணிக்கை 310,915 ஆகும்.
புள்ளிவிபரங்கள்
இது 2024 இல் பதிவு செய்யப்பட்ட 314,672 வேலைவாய்ப்புகளுடன் ஒப்பிடும்போது ஒரு சிறிய சரிவை பதிவு செய்துள்ளது. அதிக ஊதியம் பெறும் இடங்களில் அதிகமான தொழிலாளர்கள் சென்றுள்ளனர்.
இலங்கையருக்கு வேலை வழங்குவதில் குவைத் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆனால் 2024 இல் 77,890 ஆக இருந்தது 2025 இல் 77,656 ஆக சற்று குறைந்துள்ளது.
இருப்பினும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டியது.
2024 ஆம் ஆண்டில் 52,072 ஆக இருந்தது, 2025 இல் 59,505 ஆக அதிகரித்தது. சவூதி அரேபியாவிற்கான வேலைவாய்ப்பு பாரிய சரிவைக் காட்டியுள்ளது.

அது 2024 இல் 47,947 ஆக இருந்தது, 2025 இல் 36,460 ஆகக் குறைந்தது. இஸ்ரேலுக்கு, முக்கியமாக விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளுக்காக,சென்றவர்கள் 2024 இல் 10,183 ஆக இருந்து 2025 இல் 13,243 ஆக அதிகரித்தது.
ஜப்பானில் வேலைவாய்ப்பு 8,747 இலிருந்து 11,019 ஆக அதிகரித்தது. அதே நேரத்தில் ருமேனியா இலங்கை தொழிலாளர்களை தொடர்ந்து ஈர்த்துக் கொண்டுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam