சதாம் உசைனை நினைவுபடுத்தும் மதுரோ! அமெரிக்காவின் மிரள வைக்கும் இராஜதந்திர நகர்வுகள்
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து அந்நாட்டை ஆக்கிரமிக்க செயற்பட்டு வரும் ட்ரம்பின் முக்கிய இராஜதந்திர நகர்வுகள் குறித்து நிபுணர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இதற்கிடையில், மதுரோவின் கைது ஈராக்கில் அதிகாரத்தில் இருந்து அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட சதாம் உசைனின் கைதை நினைவுபடுத்துகின்றது.
1979 முதல் 2003 வரை ஈராக்கில் ஆட்சி செய்த சதாம் உசைன், “Operation Iraqi Freedom” என்ற இராணுவ படையெடுப்பு மூலம் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டார்.
CIA மற்றும் NSA வழியாக நீண்டகால உளவுத்துறை கண்காணிப்பின் கீழ் 2003இல் இந்த பதவி அகற்றல் இடம்பெற்றிருந்தது.
சதாம் உசைன்
பனிப்போர் காலத்திலும் பின்னரும், அவர் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிகளுக்கு எதிரான பிராந்திய செல்வாக்கை அதிகரித்தார்.

இதன்போது, 1990இல் குவைத் மீது மேற்கொண்ட அகிரமிப்பு, அமெரிக்காவுக்கு நேரடி பாதுகாப்பு சவாலாக அமைந்தது. அத்துடன், ஈராக்கில் பெரும் அழிவு ஆயுதங்களை (WMD) வைத்திருப்பதாகவும், சமூக மற்றும் அரசியல் கட்டுப்பாடுகளை கடுமையாக நடைமுறைப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையிலேயே, பின்னர் சதாம் கைப்பற்றப்பட்டு, அமெரிக்கா ஆதரவுடன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சர்வதேச எச்சரிக்கை மற்றும், புலனாய்வு உலக அரசியலில் “நேரடியாக எதிரியை அகற்றும் precedent” உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக பிராந்திய நிலைமை பதற்றத்திற்கு உள்ளாகி, மற்ற நாடுகளுக்கும் வலிமையான எச்சரிக்கை அமெரிக்கா வழங்கியது.
இதில் WMD குற்றச்சாட்டை வாதமாக காட்டினாலும், முக்கியமானது அவரது பிராந்திய செல்வாக்கை கட்டுப்படுத்தும் தந்திரம் என்ற செய்தியை அமெரிக்கா உலகிற்கு தெரியப்படுத்தியது.
அமெரிக்க இராணுவம்
இவ்வாறு பல மாத திட்டமிடலுக்கு பிறகு, மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்ய தலைநகரான கராகஸில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டன.

இதன்போது, வெனிசுலாவில் அதிரடியாக தாக்குதல்களை நடத்திய அமெரிக்க இராணுவம் மதுரோவை இரவோடு இரவாக நாடு கடத்தியது. மதுரோ ஒரு அமெரிக்க போர்க்கப்பலில் இருந்து ஒரு விமானத்திற்கும், இறுதியில் ஒரு நகர மன்ஹாட்டன் நீதிமன்றத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவர் போதைப்பொருள் - பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதற்கு பல தரப்புக்களில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த போதும் வெனிசுலா மக்கள் கொண்டாடினர்.
அதேநேரம், ட்ரம்ப் இனி வெனிசுலா அமெரிக்க கட்டுபாட்டின் கீழ் இயங்கும் என அறிவித்ததையடுத்து அந்நாட்டின் பிரதமர் மற்றும் எதிர்கட்கட்சியினர் எதிர்ப்பும் எச்சரிக்கையும் விடுத்தனர்.
இரகசிய யுக்தி
எண்ணெய்க்காக வெனிசுலாவை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது என பல சர்வதேச தரப்புக்களில் இருந்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், பல ஆண்டுகளாக அமெரிக்கா மேற்கொண்டு இராஜதந்திர நகர்வுகளே இதில் உற்று நோக்கப்பட வேண்டியவை என்பது முக்கியமானது.

சர்வதேச அரசியல் பரப்பில் அமெரிக்கா, பலநூற்றாண்டுகளாக உலகத் தலைமை நாடு என்னும் நிலையை தக்க வைத்து கொண்டுள்ளது. அதன் தேசிய பாதுகாப்பு, பொருளாதார ஆதிக்கம் மற்றும் பிராந்திய செல்வாக்கு ஆகியவற்றை பாதுகாப்பதில் அமெரிக்கா பல முக்கிய நகர்வுகளை எந்த வித சந்தேகமும் இன்றி எடுத்து வருகின்றது.
இந்த நிலைப்பாட்டின் விளைவாக, அமெரிக்கா முக்கிய வெளிநாட்டு தலைவர்களை நேரடியாக அல்லது மறைமுகமாக கட்டுப்படுத்தும், அகற்றும், அல்லது தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இராஜதந்திரம்
20-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 21ஆம் நூற்றாண்டிலும், அமெரிக்கா சில வெளிநாட்டு அரசியல் தலைவர்களை “தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்”, “சர்வதேச குற்றவாளி”, அல்லது “ஜனநாயக விரோத ஆட்சியாளர்” என வரையறுத்து, அவர்களை அகற்றுவதற்கான கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக அதிக இறையாண்மை கொண்ட நாடுகளை தாக்கும் வகையில் ட்ரம்பின் நகர்வுகள் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் மூலம் ஒரு நாட்டின் தலைவரை அந்நாட்டு மக்களே எதிர்க்கும் ஒரு சந்தர்ப்பத்தில் அம்மக்களுக்கு ஆதரவளிக்கும் முகமாக அந்நாட்டிற்குள் நுழையும் யுத்தியை ட்ரம்ப் மேற்கொள்வதாக பல அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2003ஆம் ஆண்டில் சதாம் உசைன் கைது செய்யப்பட்ட போதும் இதே இராஜதந்திரத்தை அமெரிக்கா பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈராக்கின் சதாம் உசைன், பனாமாவின் ஜெனரல் மானுவல் அன்டோனியோ நோரிக வரிசையில் அமெரிக்க இராணுவ பலத்தினை மீண்டும் எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது மதுரோவின் கைது.
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri