இலங்கையை உலுக்கிய இரட்டைக் கொலை: துப்பாக்கிதாரி முன்னாள் இராணுவ வீரர்..! அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள்
அக்குரேகொட இரட்டைக் கொலை தொடர்பாக கைதான துப்பாக்கிதாரி முன்னாள் இராணுவ வீரர் என தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சந்தேகநபர் பத்தேகமவைச் சேர்ந்த 46 வயதானவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் சந்தேகநபர் 2009ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் சட்டபூர்வமாக இராணுவத்திலிருந்து விலகியவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்த குற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசியொன்றும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நீதிமன்றில் முன்னிலை
இந்த நிலையில் அவர் இன்றைய தினம் (22) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
அக்குரேகொட பகுதியில் காரில் வைத்து சடத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் துப்பாக்கிதாரி என கூறப்படும் சந்தேகநபர் அம்பலாங்கொடவில் வைத்து நேற்று (21) கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri