யாழில் ஆலய பூசகரை கட்டிவைத்து பாரிய கொள்ளை..!
யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஆலய பூசகரை கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பணத்தினையும் கொள்ளை இட்டுச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த கொள்ளைச்சம்பவம் கைதடி ஏ-9 வீதியில் அமைந்துள்ள கௌரி அம்மன் ஆலயத்திலேயே நேற்று (27) இடம்பெற்றுள்ளது.
இரு கொள்ளையர்களை கைது செய்யும் நடவடிக்கை
இந்நிலையில், பூசகரின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் விரைந்தபோது இரண்டு கொள்ளையர்கள் பூசகர் அணிந்திருந்த 2 பவுண் தங்கச் சங்கிலியையும், 45 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளையருக்கு உதவிய பெண் ஒருவர் இதன் போது பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபரை இன்றையதினம் (28) சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தப்பிச் சென்ற இரு கொள்ளையர்களையும் கைது செய்யும் நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam

பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam

கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
