யாழில் சமூக செயற்பாட்டாளர்களினால் கண்டனப் போராட்டம் முன்னெடுப்பு!
யாழ். இணுவில் - காரைக்கால் பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள் கொட்டப்படும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று(9) முற்பகல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
மாற்று ஏற்பாடு
தற்போது நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் குடிப்பரம்பல் அதிகரித்துள்ளது.இதனால் கழிவுகளும் அதிகளவில் வெளியேற்றப்படுகின்றன.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக காரைக்கால் திண்மக் கழிவகறல் நிலையத்தில் பிரதேச சபையினர் கழிவுகளை கொட்டி வருகிறார்கள்.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு சம்பத்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
