ஈரான் - ஜோர்தான் கோட்டையை தகர்த்தெறியும் நகர்வில் இஸ்ரேல்
காசா மீது பாரிய அளவிலான இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க உள்ளிட்ட தரப்புக்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், காசா நகரின் பெய்ட் ஹனூன் பகுதியை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டியே குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஹமாஸின் தலைவராக யஹ்யா சின்வாரை நியமித்ததை இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் மீண்டும் சமூக ஊடகங்களில் விமர்சித்துள்ளார்.
எக்ஸ் தள இடுகை
எக்ஸ் தளத்தில் ஒரு புதிய இடுகையில், “சின்வாரின் பதவி உயர்வு பாலஸ்தீனப் பிரச்சினை இப்போது ஈரான் மற்றும் ஹமாஸால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற தெளிவான செய்தியை உலகிற்கு அனுப்புகிறது" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக ஹமாஸ் தரப்பின் பங்காளி நாடான ஈரான், ஜோர்தான் ஆகியவை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஆயுதங்களை கடத்த முயன்றதாக அவர் கடுமையானக குற்றம் சாட்டியுள்ளார்.
மற்றொரு ஈரானிய-இஸ்லாமிய தீவிரவாதக் கோட்டையை நிறுவுவதைத் தடுக்கவும், பாலஸ்தீனியர்கள் தங்கள் உள் விவகாரங்களை நிர்வகிக்கவும் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்கள் மீதான கட்டுப்பாட்டை இஸ்ரேல் பராமரிக்க வேண்டும் என்றும் காட்ஸ் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |