இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹிஸ்புல்லாவின் ஆளில்லா விமானங்கள்!
இஸ்ரேலுக்குள் உள்ள இராணுவ தளங்களை இலக்குவைத்து ஹிஸ்புல்லா அமைப்பினரால் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லெபனானின், பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த இராணுவத் தளபதி ஒருவர் கொல்லப்பட்டதற்கு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் தீவிர தாக்குதல்
எனினும் லெபனான் இஸ்ரேல் எல்லை பகுதியான ஜெனின் பகுதியின் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 71 பேர் காயமடைந்ததாகவும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐ.நா.வின் மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பொரெல் ஆகியோர் மத்திய கிழக்கில் காசா போர் பரவக்கூடும் என்ற அச்சத்தின் பேரில் தீவிர நிலையை தவிர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |