சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கிளப் வசந்தவின் புகைப்படங்கள்
அத்துருகிரிய பச்சை குத்தும் நிலையத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட கிளப் வசந்த என்ற வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேராவின் சடலத்தின் நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சுமார் 30 பேரிடம் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
குறித்த சடலத்தின் பிரேத பரிசோதனைக்காக இணைந்த மருத்துவ மாணவர்கள் ஊடாக குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கொலைச்சம்பவம் தொடர்பான காணொளி, புகைப்படங்களை வெளியிட்ட ஊடகவியலாளர்களிடம் இருந்து குறிப்புகளை எடுத்துக்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
