மன்னார் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு விவகாரம்: விசாரணையில் அம்பலமான விடயங்கள்
மன்னார் (Mannar) மாவட்ட பொது வைத்தியசாலையில் இளம் பட்டதாரி பெண் மரணம் தொடர்பான விசாரணை குழுவின் விசாரணை நிறைவில் தவறிழைத்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்துள்ளார்.
மன்னார் - தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான 27 வயதுடைய இளம் தாய் ஒருவர்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
குறித்த பெண்ணின் மரணத்திற்கு சம்பவ தினத்தன்று விடுதியில் இருந்தவர்களின் அசமந்த போக்கே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது.
விசேட அறிக்கை
இது தொடர்பாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் சுயாதீன விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த விடயத்தில் சிலர் தவறிழைத்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான விசேட அறிக்கை வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு
மேலதிக நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொலை அச்சுறுத்தல்
மேலும் மத்திய சுகாதார அமைச்சின் விசாரணைக் குழு ஒன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
அத்துடன், சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மத்திய சுகாதார அமைச்சின் விசாரணைகள் முடிவடைந்தவுடன் தவறிழைத்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இதேவேளை, உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தொலைபேசிக்கு பல்வேறு அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை பணிப்பாளர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்துள்ளார்.
இது குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
