வேலைநிறுத்தம் வேண்டாம்! மஸ்கெலியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், நாளை (30) முன்னெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மஸ்கெலியாவில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இன்று (29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மஸ்கெலியா பேருந்து நிலையத்திற்கு அருகில் பிற்பகல் 2 மணியளவில் இந்த அமைதியான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கோரிக்கை
இதன்போது கருத்துத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து, மஸ்கெலியா அம்மன் ஆலயத்திற்குச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதிக்கு நீண்ட ஆயுளும் நல்லாசியும் கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்தித்து தேங்காய் உடைத்து விசேட வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 3 நாட்கள் முன்
தரையிறங்கவிருந்த விமானத்தை நிலநடுக்கத்தில் இருந்து சாமர்த்தியமாக காப்பாற்றிய திக் திக் தருணம் News Lankasri