செங்கடலில் தாக்கப்பட்ட பிரித்தானிய கப்பல்
யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைத் தாக்குதலில் செங்கடல் வழியாகப் பயணித்த பிரித்தானிய எண்ணெய் கப்பல் தீப்பிடித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கில் யேமனுக்கும் கிழக்கில் அரபிக்கடலுக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலில் ஆழமான இடமாகக் கருதப்படும் ஏடன் வளைகுடாவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரானின் ஆதரவுடன் மேற்குலக நாடுகளால் சந்தேகிக்கப்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

'மெர்லின் லுவாண்டா' எனப்படும் எண்ணெய்க் கப்பல் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பணியாளர்கள்
இந்தியா, ஜப்பான், அமெரிக்க மற்றும் பிரான்ஸ் கடற்படைகளின் உதவியுடன் தீயை அணைத்ததாக பிரித்தானியாவில் உள்ள கப்பல் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்போது 22 இந்தியர்கள் மற்றும் ஒரு பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கப்பல் பாதுகாப்பாக அருகில் உள்ள துறைமுகத்திற்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யேமனில் உள்ள தங்கள் தளங்கள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக இது அமைந்தது என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri