வடக்கு மக்களின் கடல்வளம் தேசிய நிறுவனங்களிடம் தாரைவார்க்கப்படுகிறது: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Jaffna Sri Lanka Eastern Province Northern Province of Sri Lanka
By Kajinthan Mar 11, 2024 10:06 AM GMT
Report

வடக்கு மக்களின் கடல்வளத்தை பல்தேசிய நிறுவனங்களிடம் தாரை வார்க்கும் செயற்பாட்டால் எதிர்கால சந்ததியினருக்கு பாதிப்பு ஏற்படலாம் என சமூக செயற்பாட்டாளரும் மூத்த நிர்வாக அதிகாரியுமான செல்வின் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழில் இடம்பெற்ற கடற்றொழிலாளர் அமைப்புகளுடனான கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கோலாகலமாக நடைபெற்ற 96 வது ஒஸ்கர் விருதுகள் - விருதுகளை அள்ளிக் குவித்த ஓபன்ஹெய்மர்

கோலாகலமாக நடைபெற்ற 96 வது ஒஸ்கர் விருதுகள் - விருதுகளை அள்ளிக் குவித்த ஓபன்ஹெய்மர்

கடற்றொழிலாளரது வாழ்வியல்

மேலும் தெரிவிக்கையில், “மனிதன் வாழ்கின்ற இயற்கை சூழல் மக்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டுமே அல்லாமல் பல்தேசிய கம்பனிகளிடம் இருப்பது ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும்.

வடக்கு மக்களின் கடல்வளம் தேசிய நிறுவனங்களிடம் தாரைவார்க்கப்படுகிறது: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Marine Resources Handed Over Corporations

வடக்கு மக்களின் கடல் சூழல் பல்தேசிய கம்பனிகளிடம் தாரை வார்க்கும் செயற்பாடானது கடற்றொழிலாளர்களின் வாழ்வியலை கடல் சூழலில் இருந்து அப்புறப்படுத்தும் செயற்பாடாக அமைகிறது.

யாழ்ப்பாணம் - குடாக்கடலின் வெளிப்புறம் பாக்கு நீரிணையாகக் காணப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாண குடாக்கடலின் பல இடங்களில் பாலங்கள் மற்றும் சிறிய மதகுகள் இடப்பட்டு இயற்கை நீரோட்டங்கள் மறிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக யாழ்ப்பாண குடாக் கடலை நம்பி வாழ்கின்ற சிறு கடற்றொழிலாளர்களின் வாழ்வியல் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளதுடன் சிறு கடல் தொழில் வேளாண்மை அழிக்கப்பட்டு வருகிறது.

அந்நிய செலாவணி

இலங்கையில் 50 வீதமான புரதம் கடல் உணவில் இருந்து பெறப்படும் நிலையில் யாழ்ப்பாண குடாவில் நீர் வேளாண்மை என்ற பெயரில் கடல் அட்டை பண்ணைகள், பாசி வளர்ப்புக்கள் திணிக்கப்பட்டு வருகிறது.

அட்டை பண்ணைகளால் வருமானம் அதிகரிக்கும். அந்நிய செலாவணியை பெறலாம் என்ற கருத்து மேலோங்கி இருக்கின்ற நிலையில் அதனை நானும் மறுக்கவில்லை.

வடக்கு மக்களின் கடல்வளம் தேசிய நிறுவனங்களிடம் தாரைவார்க்கப்படுகிறது: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Marine Resources Handed Over Corporations

எமது உணவுத்தட்டில் கடல் அட்டை இல்லாத நிலையில் நாம் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கு அப்பால் இந்த வர்த்தக நீதியான துறை தோற்றுப் போனால் பாரம்பரிய கடற்றொழிலை நம்பி இருப்பவர்களின் நிலை என்ன என்பதை எவராலும் கூற முடியுமா?

பல்தேசிய கம்பெனிகளின் வருமான மார்க்கத்திற்காக எமது வளங்களை விட்டுவிட்டு பல்தேசியக் கம்பெனிகளின் விநியோக சங்கிலி தோற்றுப் போனால் மீண்டும் கடல் மீன் பிடியில் கடற்றொழில் சமூகம் இறங்குமா என்ற கேள்வி காணப்படுகிறது.

கடற்றொழில் சமூகம்

எமது கடலில் இயற்கையான கடல் அட்டை காணப்படுகிறது. அதனை கடற்றொழிலாளர்கள் பிடித்து விற்பனை செய்கிறார்கள் ஏன் செயற்கையான முறையில் வளர்த்து அட்டைகளை கடலில் விட வேண்டும்.

வடக்கு மக்களின் கடல்வளம் தேசிய நிறுவனங்களிடம் தாரைவார்க்கப்படுகிறது: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Marine Resources Handed Over Corporations

இலங்கையின் பலமான 1330 கிலோமீற்றர் கடற்கரப்பில் 800 கிலோமீற்றர் கடற்பரப்பு வடக்கு கிழக்கில் காணப்படும் நிலையில் அதற்குள் அட்டைப் பண்ணைகளை அமைத்து இடையூறு செய்யக்கூடாது.

ஆகவே, எமது கடற்றொழில் சமூகத்தையும் அவர்களின் கடற்றொழில் முறைகளையும் எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாத்துக் கொடுக்க வேண்டும் என்றால் கடலை சுதந்திரமாக சுவாசிக்க விட வேண்டும் எனவும் செல்வின் தெரிவித்துள்ளார். 

ஏப்ரலில் அரச ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு - ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

ஏப்ரலில் அரச ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு - ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

சர்வதேச சந்தையில் அதிக கேள்விக்குள்ளாகியுள்ள நீல சங்கு பூக்கள்

சர்வதேச சந்தையில் அதிக கேள்விக்குள்ளாகியுள்ள நீல சங்கு பூக்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  


மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US