அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ்கோடியில் மரதன் ஓட்டப்போட்டி
வைத்தியர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 94வது பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ்கோடி - அரிச்சல்முனையில் மரதன் ஓட்டப்போட்டி நடத்தப்பட்டுள்ளது.
குறித்த போட்டி நேற்றைய தினம் (25.10.2025) இடம்பெற்றுள்ளது.
மரதன் ஓட்டப்போட்டிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் கொடியசைத்து துவக்கி வைத்து, பங்கேற்று வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு தொகை கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கியிருந்தார்.
நூற்றுக்கணக்கானோர் பதிவு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஆண்களுக்கான 10 கிலோமீற்றர் மற்றும் பெண்களுக்கான 5 கிலோமீற்றர் மரதன் ஓட்டப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டிகளில் பங்கேற்க சுமார் 750க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து இருந்தனர்.
இதில் கூடுதல் ஆட்சியர், ராமேஸ்வரம் உதவி காவல் கண்காணிப்பாளர், மாவட்ட விளையாட்டு அலுவலர், ராமேஸ்வரம் நகர்மன்றத் தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025