புதுக்குடியிருப்பு தேராவில் குளத்து வெள்ள நீரால் பல குடும்பங்கள் பாதிப்பு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் குளத்தில் வெள்ள நீர் நிரம்பி காணப்படுவதால் அப்பகுதியிலுள்ள 10 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாரிய மழைவெள்ளம் ஏற்பட்டு இன்றுடன் சுமார் 15 நாட்களாகும் நிலையில் இவ்வாறான அவல நிலை தொடர்ந்தும் காணப்படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
கிராமத்திற்கான குளம்
தேராவில் குளம் விவசாய செய்கைக்கு உட்படாத கிராமத்திற்கு பொதுவாக காணப்படும் ஒரு சிறிய குளம்.
நிலத்தடி நீருக்கும் கால்நடைகளுக்குமான நீரினை பெற்றுக்கொள்வதற்காக அமைக்கப்பட்ட குளத்தில் தற்போது நன்னீர் மீன்பிடி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்நிலையில், குளத்தின் மேலதிக நீர் வெளியேற்றுவதற்கான எந்த அமைப்பும் இல்லாத நிலையில் குளம் அமையப்பெற்றுள்ளது.
இதன்காரணமாக, அண்மையில் பெய்த மழையால் குளம் நிரம்பி மக்களின் காணிகள், வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதொடு, இரண்டு கோவில்களும் குளத்து நீரினால் மூழ்கியுள்ளன.
குடி நீர் இன்மை
மேலும் மலசலகூடங்கள், கிணறுகள் என அனைத்தும் நிரம்பிய நிலையில் காணப்படுவதால் மக்களால் குடி நீரைப் பெற்றுக்கொள்வதில் கூட சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
எனினும், தமது நிலை தொடர்பில் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு தெரியப்படுத்தியும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 7 மணி நேரம் முன்

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
