நாட்டில் மேலும் பல கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்: இற்றைவரை நிலவரம்
நாட்டில் மேலும் 722 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 563,989 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம் மேலும் 347 பேர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (30) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 540, 387 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கோவிட் தொற்றுக்குள்ளான மேலும் 8, 552 பேர் சிகிச்சை மையங்களிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri