இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகை போதைப்பொருள்! - இலங்கையர்கள் உள்ளிட்ட பலர் கைது
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 11 கிலோ 'ஆம்பெட்டமைன்' போதைப் பொருளை, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இலங்கையர்கள் மூவர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற வாகனத்தை சோதனை செய்த போது இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவற்றை பறிமுதல் செய்து, வாகன ஓட்டுனர், உரிமையாளர், இடைத்தரகர் என மூவரை பொலிஸார் கைது செய்தனர். போதை பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட, இலங்கையர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், கடல் வழியாக இலங்கைக்கு போதை பொருளை கடத்த இருந்தது தெரிய வந்துள்ளது.
போதை பொருள் கடத்தல் பின்னணியில் உள்ள, கும்பல் குறித்து துப்பு துலக்க வேண்டி இருப்பதால், கைது செய்யப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்களை வெளியிடவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
வண்டியை எரிக்க சென்ற முல்லையை வெளுத்து வாங்கிய ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது மாஸ் புரொமோ Cineulagam
Bigg Boss: பாரு, கம்ருதினால் கிடைத்த தண்டனை... விஜய் சேதுபதியிடம் குற்றவாளியாக நிற்கப்போவது யார்? Manithan