மனுஷ தாக்கல் செய்த மனு குறித்து நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஜூன் 25ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென் கொரிய விசா சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையால் சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார மனுத்தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு நேற்று (13.02.2025) விசாரணைக்கு உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
மனு விசாரணை
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான துணை சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க, இந்த மனுவின் மற்ற பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மனுதாரருக்கும் பிரதிவாதிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், மனுவை ஜூன் 25ஆம் திகதி பரிசீலிக்க உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை, மனுதாரர், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சார்பாக ஜனாதிபதி வழக்கறிஞர் சாலிய பீரிஸ் முன்னிலையாகியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |