வடக்கு மாகாண அதிபர் இடமாற்றங்களில் முறைகேடு! பகிரங்கப்படுத்தும் ஆளும் தரப்பு
வடக்கு மாகாண அதிபர் இடமாற்றங்களில் இடம்பெற்று வரும் முறைகேடுகள் மற்றும் அநீதிகள் குறித்து உரிய தரப்புகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கணட விடயம் குறித்து கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "வடக்கு மாகாணத்தில், அதிபர் மற்றும் ஆசிரியர்களின் இடமாற்றம் மற்றும் நியமனங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்துள்ளோம்.
இதன்போது, உரிய அதிகாரிகள் மற்றும் மாணவர்களின் தரப்பிலிருந்து யோசிக்கப்பட்டு அதற்கான தீர்வினை எட்டும் வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே, அதிபர் மற்றும் ஆசிரியர் நியமனங்களில் இடம்பெறும் முறைகேடுகள், பிரச்சினைகள் குறித்து விரைவில் தீர்வு காணப்படும் என ஆளுநர் உத்தரவாதம் வழங்கியுள்ளார்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)