செம்பியன் கிண்ணத்துக்காக தயாராகும் எட்டு அணி வீரர்களின் விபரம்
சர்வதேச கிரிக்கட் சம்மேளன (ICC) ஆண்கள் செம்பியன்ஸ் கிண்ண 2025 போட்டிகள் ஆரம்பிக்க இன்னும் ஒரு வாரம் மீதமுள்ளது.
இந்தநிலையில், போட்டிகளில் பங்கேற்கும் 8 நாடுகளும், தங்கள் அணியை இறுதி செய்து, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் விளையாடும் வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளன.
குழு ஏ
பங்களாதேஸ் அணி - நஸ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையில், சௌமியா சர்க்கார், தன்சித் ஹசன், தவ்ஹித் ஹிருடோய், முசபிகுர் ரஹீம், முகமது மஹ்முதுல்லா, ஜாகர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ரிசாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், பர்வேஸ் ஹொசை எமோன், நசும் அகமது, தன்சிம் ஹசன் சாகிப், நஹித் ராணா.
இந்தியா - ரோஹித் சர்மாவின் தலைமையில் சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரிசப் பந்த், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வோசிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, முகமது சமி, அர்ஸ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி.
நியூசிலாந்து - மிட்செல் சாண்ட்னரின் தலைமையில் மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவன் கொன்வே, லக்கி பெர்குசன், மெட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ’ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, பென் சியர்ஸ், நேதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங்.
பாகிஸ்தான் முகமது ரிஸ்வான் தலைமையில் பாபர் அசாம், ஃபகார் ஜமான், கம்ரான் குலாம், சவுத் சகீல், தயப் தாஹிர், ஃபஹீம் அஸ்;ரஃப், குஸ்தில் சா, சல்மான் அலி ஆகா, உஸ்மான் கான், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவூஃப், முகமது ஹஸ்னைன், நசீம் சா, சாஹீன் சா அப்ரிடி.
குழு பி
ஆப்கானிஸ்தான் ஹஸ்மத்துல்லா சாஹிதி தலைமையில், இப்ராஹிம் ஜத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிகுல்லா அடல், ரஹ்மத் சா, இக்ராம் அலிக்கில், குல்படின் நைப், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, ரசீத் கான், நங்யால் கரோட்டி, நூர் அகமது, ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஃபரித் மாலிக், நவீத் ஜத்ரான்.
அவுஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் சீன் அபோட், அலெக்ஸ் கேரி, பென் டுவார்யிஸ், நேதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஸ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜோன்சன், மார்னஸ் லபுசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேத்யூ சோர்ட், அடம் ஸம்பா.
இங்கிலாந்து ஜோஸ் பட்லர் தலைமையில் ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், டொம் பான்டன், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரசித், ஜோ ரூட், சாகிப் மஹ்மூத், பில் சோல்ட், மார்க் வுட்.
தென்னாப்பிரிக்கா டெம்பா பவுமாவின் தலைமையில், டோனி டி ஜோர்ஜி, மார்கோ ஜன்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி என்கிடி, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் சாம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டூஸ்சென் வான்சென் மற்றும் கோர்பின் போஷ்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
