மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா குறித்து விசேட கலந்துரையாடல்

Mannar Sri Lankan Peoples Festival
By Ashik Aug 09, 2024 06:33 PM GMT
Report

மன்னார் (Mannar) மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலிக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (09) மடு திருத்தலத்தில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் - மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15ஆம் திகதி விசேட திருவிழாவாக இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில், மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவுக்கான ஆயத்த கலந்துரையாடலானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் பங்குபற்றுதலுடன் இன்று (09) காலை மடு திருத்தல மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

ரோபோ நாய்களை போர்க்கள ஆயுதமாக்க தயாராகும் உக்ரைன்

ரோபோ நாய்களை போர்க்கள ஆயுதமாக்க தயாராகும் உக்ரைன்

முன்னாயத்த நடவடிக்கைகள் 

வருடா வருடம் மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழமை.

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா குறித்து விசேட கலந்துரையாடல் | Mannar Madu Temple Thiruvizha Meeting

இதற்கமைய, வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய சகல விதமான ஏற்பாடுகள் தொடர்பில் அழைக்கப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடப்பட்டது.

மேலும், வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சுகாதாரம், போக்குவரத்து, மருத்துவ வசதிகள், நீர் மற்றும் உணவு விநியோகம் உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டது.

கடவுச்சீட்டு தட்டுப்பாடு: பொதுமக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

கடவுச்சீட்டு தட்டுப்பாடு: பொதுமக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

சட்டம் ஒழுங்கு  

அதேவேளை, சட்டம் ஒழுங்கை பின்பற்றும் வகையில் முப்படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா குறித்து விசேட கலந்துரையாடல் | Mannar Madu Temple Thiruvizha Meeting

எதிர்வரும் 06ஆம் திகதி மருத மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு,15 ஆம் திகதி திருவிழா திருப்பலி கூட்டுத்திருபலியாக ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த முன்னாயத்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார், இராணுவம், பொலிஸார், கடற்படை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள், மற்றும் அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

கண்டி எசல பெரஹராவை காணவரும் பக்தர்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

கண்டி எசல பெரஹராவை காணவரும் பக்தர்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US