லியோனல் மெஸ்ஸிக்கு கிடைத்த ஸ்பெயினின் உயரிய விருது
அர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி, தமது சிறந்த விளையாட்டு வாழ்க்கை மற்றும் நலிவடைந்த குழந்தைகளின் சுகாதாரம், கல்விக்கான சமூகப் பணிகளுக்காக, ஸ்பெயினின் மிகவும் மதிப்புமிக்க விளையாட்டு விருதான 'பிரின்சஸ் ஆஃப் அஸ்டூரியாஸ்' (princess of asturias ) விருதைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
ஸ்பெயினின் ஓவியேடோ நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், ஸ்பெயின் சிம்மாசனத்தின் வாரிசான இளவரசி லியோனாரிடமிருந்து மெஸ்ஸி இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.
வெற்றிகரமான கால்பந்து வீரர்
வரலாற்றின் மிகவும் வெற்றிகரமான கால்பந்து வீரர் எனத் தேர்வுக்குழு அவரைப் பாராட்டியுள்ளது.
இந்தநிலையில், "மெஸ்ஸி தனது திறமையால் அசாதாரணமான விடயங்களைக்கூட சாதாரணமாக மாற்றினார். சுயநலமின்றி, அணியின் கூட்டு உணர்விற்கு மதிப்பளித்து ஆட்டத்தை வழிநடத்தினார்" என இளவரசி லியோனார் புகழாரம் சூட்டினார்.

1981-இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த 'பிரின்சஸ் ஒஃப் அஸ்டூரியாஸ்' விருது 50,000 யூரோ பரிசுத் தொகையைக் கொண்டது. கலை, அறிவியல், விளையாட்டு போன்ற துறைகளில் சர்வதேச அளவில் மிகச்சிறந்த முறையில் பங்காற்றுபவர்களுக்கு இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
8 பாலோன் டி ஓர் விருதுகள், உலகக் கிண்ண மற்றும் பார்சிலோனா கழக அணிக்காகப் பல கிண்ணங்களை வென்றுள்ள மெஸ்ஸி, சர்வதேச போட்டிகளிலிருந்து அண்மையில் ஓய்வு பெற்றார். இவர் தற்போது அமெரிக்காவின் 'இன்டர் மயாமி' அணிக்காக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ அதிகாரியின் மகனையும் விட்டு வைக்காத கோட்டாபய! மகிந்தவும் மகனும் தப்பி ஓடிய இரகசிய தடுப்பு முகாம்..