கண்டி எசல பெரஹராவை காணவரும் பக்தர்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
கண்டியில் நடைபெறவுள்ள எசல பெரஹராவை காண வரும் பக்தர்கள் பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
வருடந்தோரும் கண்டி எசல பெரஹராவின் போது நாளொன்றுக்கு மூன்று தொன் பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் ஏனைய திண்மக் கழிவுகள் சேகரிக்கப்படுவதாக அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய, பொலித்தீன், பிளாஸ்டிக் உள்ளிட்ட உக்காத பொருட்களின் பயன்பாட்டை முடிந்தவரை பக்தர்கள் குறைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டம்
மேலும், குப்பைகளை உரிய இடங்களில் மாத்திரம் இடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல வருடங்களாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மத்திய மாகாண அலுவலகம், கண்டி மாகாண கல்வி திணைக்களம், கண்டி மாவட்ட செயலகம், கண்டி மாநகர சபை மற்றும் கண்டி பொலிஸ் ஆகியவற்றின் தலைமையில் கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இம்முறை கண்டி எசல பெரஹரா இம்மாதம் 10ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |