இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இலத்திரனியல் கடவுச்சீட்டு
இலங்கையில், ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அல்லது நடுப்பகுதியில் இலத்திரனியல் கடவுச்சீட்டு (e - passport) அறிமுகப்படுத்தப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.
கடவுசீட்டுக்காக தற்போது செலுத்தப்படும் தொகையை செலுத்தி குறித்த இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள விரும்பும் மக்கள் ஒக்டோபர் மாதம் வரை காத்திருந்து பெற்றுக்கொள்ளுவது சிறந்தது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அமைச்சரின் கோரிக்கை
இவ்வாறு இலத்திரனியல் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில், புதிய வசதிகள் மற்றும் 'Chip' உடன் கூடிய கடவுசீட்டுக்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போது ஒரு நாளுக்கு 1,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் வீதம் மாத்திரமே வழங்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மிக அவசரமாக கடவுசீட்டை பெற இருப்பவர்கள் மாத்திரம் சாதாரண கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளுமாறும் ஒக்டோபர் மாதத்திற்கு முதல் அநாவசியமாக கடவுச்சீட்டை பெறுவதை தவிர்க்குமாறும் அவர் கோரியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் கதாநாயகி யார்.. மூன்று முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
