ஐரோப்பாவை உலுக்கும் மக்கள் போராட்டம்! பல நாடுகளில் தொடரும் பதற்றம்
பிரான்ஸுக்கு வெளியேயும் பெல்ஜியம், அல்பேனியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் கல்வி முறையில் சிறந்த நிலைமைகளை ஏற்படுத்தக் கோரி அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டன.
மக்கள் போராட்டம்
இதன்போது, போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் மிளகுத் தெளிப்பான்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
அல்பேனியா தலைநகர் திரானாவில் ஆயிரக்கணக்கானோர் அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காகப் பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இத்தாலி மிலான் நகரில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட போராட்டங்களை முன்னிட்டு, பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர்.
கடந்த வார இறுதியில் இடம்பெற்ற கலவரங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களைத் தொடர்ந்து, இத்தாலி அரசாங்கம் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கியுள்ளது.
இதன் காரணமாக, கடந்த வார இறுதியுடன் ஒப்பிடுகையில் இம்முறை நிலைமை அமைதியாகக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிங்ஸ்பரி ஹோட்டலில் நடந்த இரகசிய சந்திப்பில் சரத் வீரசேகர! முகத்தை மூடிச்சென்ற கஸ்ஸப்ப தேரர் - வெளியான காணொளி..
இராணுவ அதிகாரியின் மகனையும் விட்டு வைக்காத கோட்டாபய! மகிந்தவும் மகனும் தப்பி ஓடிய இரகசிய தடுப்பு முகாம்..