மன்னார் மடு மாத தேவாலய ஆவணி மாத திருவிழா தொடர்பில் அறிவிப்பு..!(Video)
மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியை இம்முறை திருத்தந்தையின் பிரதிநிதி பேரயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுவள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (28.07.2023) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திரு விழாவுக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலின் போதே இவாவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
''இம்முறை ஆவணி மாத திருவிழாவிற்கு வழமையை விட சுமார் 7 இலட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கப்பட்டுள்ளது.
வீடு வழங்க முடியாத நிலை
மடு திருத்தலத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் முன்பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையினால் வருகின்ற திருப்பணிகளுக்கு வீடு வழங்க முடியாத நிலை உள்ளது.
எனினும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடாரம் அமைத்து மடு திருவிழாவில் கலந்து கொள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எதிர் வரும் ஆவணி மாதம் 6ஆம் திகதி(06-08-2023) கொடியேற்றத்துடன் திருவிழா ஆயத்த நவ நாட்களை ஆரம்பிக்கின்றோம்.
அதனைத்தொடர்ந்து ஆவணி 14 ஆம் திகதி மாலை வேஸ்பர் ஆராதனையும் 15 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுக்கப்படும்.'' என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |






பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 5 நாட்கள் முன்

அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஆனந்திக்கு ஏற்பட்ட ஆபத்து... பரபரப்பான சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
