மன்னார் மடு கோவில் மோட்டை விவசாயிகள் கொட்டும் மழையிலும் கொழும்பில் போராட்டம்
கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் மன்னார் - மடு கோவில் மோட்டை விவசாயிகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் கோவிட் என்று ஓடி ஒளியாமல் ஏழை விவசாயிகளின் பிரச்சனைக்குத் தீர்வு கொடு, ஆளுநரிடம் காணி பெறுவதற்கான அனுமதி கோராமல், காணி தங்களுடையது என கூறும் அராஜகத்தை மத குருக்கள் நிறுத்துங்கள், போன்ற பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோவில் மோட்டை விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
தொடர்ந்து போராட்ட களத்திற்குச் சென்ற ஜனாதிபதியின் செயலாளரிடம் சட்டத்தின் பால் வடக்கு மாகாணம் எடுத்த முடிவை நடைமுறைப்படுத்த மத்திய அரசு இடமளிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளடங்கலாக எழுதப்பட்டிருந்த மகஜர் ஒன்றை ஜனாதிபதியின் செயலாளரிடம் விவசாயிகள் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.










காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri
