சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு ஜேர்மன் உதவ வேண்டும் : மணிவண்ணன் வேண்டுகோள் (PHOTOS)
தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையாகவுள்ள சமஷ்டி அடிப்படையிலான தீர்வை பெற்றுக்கொள்வதற்கும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பு உட்பட்ட அநீதிகளுக்கு நீதியை பெற்று கொடுப்பதற்கும் ஜேர்மன் உள்ளிட்ட சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் (manivannan visvalingam) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை நாட்டுக்கான ஜேர்மன் தூதுவர் Holger seubrt க்கும் யாழ். மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (29) யாழ். மாநகரசபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்ட மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை தாண்டி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அல்லது சிறப்பு தீர்ப்பாயம் ஒன்றிற்கு குறித்த விடயங்கள் பாரப்படுத்தப்பட வேண்டும் என்றும் முதல்வர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
மேலும் யுத்த அழிவில் இருந்து மீண்டு வரும் எமது பிராந்திய அபிவிருத்திக்கும் ஜேர்மன் உதவ வேண்டும் என்றும் யாழ் மாநகர சபைக்கும் ஜேர்மனின் பிரதான நகரங்களுடன் இரட்டை நகர் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டு இணைந்து செயற்படுவதற்கும் உதவ வேண்டும் என்றும் முதல்வர் தூதுவரிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இதன்போது முதல்வரால் தூதுவருக்கு நினைவுச்சின்னம் ஒன்றும் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது.





இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

குக் வித் கோமாளி புகழ் வெங்கடேஷ் பட் இவ்வளவு சொத்துக்கு சொந்தக்காரரா?- முழு சொத்து மதிப்பு இதோ Cineulagam
