ஒலியமைப்பு சீரின்மையால் எழுந்த பிரச்சினைக்கு மானிப்பாய் பிரதேசசபை தவிசாளர் தீர்வு
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் ஒலியமைப்பு சீரின்மை, காரணமாக பின்னால் இருந்த உறுப்பினர்களுக்கு கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் விளங்காததால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று(23.01.2026) தவிசாளர் ஜெசீதன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
கோரிக்கை
இதன்போது இது குறித்து இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் த.ராஜ்குமார் கருத்து தெரிவிக்கையில்,
சபை மண்டபத்தில் படம்காட்டும் கருவி (Projector) உள்ளது. ஆனால் அது இயக்கப்படுவது இல்லை. கடந்த கூட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும்போது அதனை படம்காட்டும் கருவி (Projector) மூலம் காண்பித்தால் நன்று.

கடந்த கூட்ட அறிக்கையில் திருத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்து கூறும்போது ஒலிவாங்கி சீரின்மையால் பின்னால் இருப்பவர்களுக்கு விளங்கவில்லை.
ஆகவே படம்காட்டும் கருவி (Projector) இனை இயங்க வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பின்னால் இருந்த உறுப்பினர்களும் தமக்கு கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் விளங்கவில்லை என்ற சத்தமிட்டுள்ளனர்.
அதற்கு பதிலளித்த தவிசாளர், இதுவரை அவ்வாறான நடைமுறை இல்லை. அப்படி காண்பிக்க முடியாது. அனைவருக்கும் அறிக்கை தரப்பட்டுள்ளது என்றும், ஒலிவாங்கி மற்றும் ஒலிபெருக்கியை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam