தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அறிவிப்பு
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மேற்கொள்ளும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் (AMS) தெளிவுபடுத்தல் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நிபுணர்களின் நீண்டகால கோரிக்கை
ஆனால் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் (AMS) தமது உறுப்பினர்கள் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதையும், பொதுமக்களுக்கு தடையற்ற விசேட மருத்துவ சேவைகள் வழமைபோல் தொடரும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

விசேட வைத்திய நிபுணர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை தாமதப்படுத்தும் அல்லது பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் எமது சங்கம் வன்மையாக எதிர்க்கின்றதாக தெரிவித்துள்ளது.
இத்தகைய தாமதங்கள் தொழில்முறை ஸ்திரத்தன்மைக்கும் நோயாளர் பராமரிப்பின் தரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என சங்கம் கருதுகின்றது.
சுகாதாரத் துறையின் பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான கலந்துரையாடலும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளுமே சிறந்த வழிமுறைகள் என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் ( AMS) தெரிவித்துள்ளது.
நோயாளர்களின் உரிமையையும் வைத்தியர்களின் தொழில்முறை நேர்மையையும் பாதுகாக்க எமது சங்கம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam