யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட திருவெம்பாவை பாராயணம் நிறைவு
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் கடந்த ஒன்பது நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த திருவெம்பாவைப் பாராயணம் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.
பரமேஸ்வரா ஆலயத்திலிருந்து இன்று(3.1.2026) அதிகாலை 3 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட மாணிக்கவாசகர் திருவீதியுலா, கலட்டிச்சந்தி ஊடாக யாழ். பல்கலைக்கழக பாலசிங்கம் விடுதியினைக் கடந்து சென்றுள்ளது.
மாணிக்கவாசகர் திருவீதியுலா
இதனைத் தொடர்ந்து, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஊடாக திருநெல்வேலி சந்தியை அடைந்து, அதனூடாக பரமேஸ்வராச் சந்தியினை அடைந்து, திருநெல்வேலி வீரகத்தி விநாயகர் ஆலய வழிபாடுகளை தொடர்ந்து, மீண்டும் யாழ். பல்கலைக்கழகத்தை திருவெம்பாவை பாராயணத்துடன் வந்தடைந்துள்ளது.

இதன்போது, வீதியில் காணப்பட்ட ஆலயங்களில் விசேட வழிபாடுகளுடன் அடியவர்களின் வழிபாடுகளும் இடம்பெற்று பிரசாதங்களும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த பாராயணத்தில், யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த பாராயணமானது தொடர்ச்சியாக 7 வருடமாகவும் முன்னெடுக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.


உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri