ரணில் - சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்து சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள கோரிக்கை
ஜனாதிபதி வேட்பாளர்கள் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் மேலும், "ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவருமே தற்போதைய அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
13 ஆவது திருத்த சட்டம் பொலிஸ், காணி மற்றும் நிதி ஏற்பாடுகளுடன் முழுமையாக நடைமுறைபடுத்தப்படும் என்று இருவருமே உறுதியளிக்கவில்லை. இது அதிகார பகிர்வு தொடர்பில் அவர்களின் நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
புதிய அரசியலமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இருவரும் எந்தவிதமான விபரங்களும் இன்றி மொட்டையாக குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
புதிய அரசியலமைப்பில் தமிழ் தேசிய பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்படும் என்று எந்த யோசனைகளையும் இருவரும் துளியளவும் குறிப்பிடவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறியுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |