நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கிழக்கு மாகாண ஆளுநரிடம் விடுத்துள்ள கோரிக்கை(Video)
மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை பிரச்சினை தொடர்பில் கிழக்கு ஆளுநர் சரியான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் இடையிலான சந்திப்பின் போதே இக்கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
இந்த சந்திப்பானது திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்றைய தினம் (24.09.2023) இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து இரா.சாணக்கியன் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பண்ணையாளர்களி்ன் போராட்டம்
“மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் 10 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.அவர்களுடைய பிரதானமான கோரிக்கை ஆளுநர் வரவேண்டும் என்பது இது தொடர்பாக ஆளுநருக்கு எடுத்துரைத்தோம்.
குறித்த காணி மகாவலி அதிகாரசபையின் கீழ் வருகின்ற காணிகளே தவிர கிழக்கு ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் வரும் காணிகள் அல்ல அந்த அடிப்படையிலே மாகாண ஆளுநரிடம் மட்டும் நாம் இதற்கான தீர்வை எதிர்பார்க்க முடியாது.

இதைப்பற்றி ஜனாதிபதியிடமும் கலந்துரையாடவுள்ளோம்.அதன் பின்னர் தான் மக்களுக்கு அது தொடர்பாக ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும்.
எனினும் பண்ணையாளர்களுக்கு சரியான ஒரு முடிவை சொல்ல வேண்டிய ஆளும்கட்சி அமைச்சர்கள் தங்களுடைய சுயநலனுக்காக இயங்கிக்கொண்டிருக்கின்றார்களே தவிர மக்களுடைய பிரச்சினையைப் பற்றி எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதையும் கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சந்திப்பில் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை பிரச்சினை மட்டுமல்லாமல் திருகோணமலை மாவட்டத்தில் பௌத்த விகாரைகளுக்காக பிக்குகளால் அடாவடித்தனத்தின் மூலம் ஆக்கிரமிக்கப்படுகின்ற காணிகள், வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள், தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு, சட்டவிரோத மணல் அகழ்வு போன்ற மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இதன் போது திருகோணமலை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட குழு தலைவர் எஸ்.குகதாசன் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam