மதுபோதையில் ஏற்பட்ட கைகளப்பினால் நேர்ந்த விபரீதம்
அனுராதபுரம் - சீப்புக்குளம் பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட கைகளப்பினால் நபரொருவர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
சீப்புக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று(24.09.2023) இடம்பெற்ற மது விருந்தின் போதே இக்கொலை இடம்பெற்றுள்ளதாக மிகிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
விருந்தின் போது ஏற்பட்ட வாய் தகராறானது பின்னர் மோதலாக மாறியதில், தாக்குதலில் பாதிப்படைந்த நபர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் உயிரிழந்தவரின் சகோதரர் உள்ளிட்ட சிலர் மதுபான விருந்து வைத்துள்ள நிலையில், அதில் கலந்துகொண்ட இருவரே இக்கொலையைச் செய்துள்ளனர்.
இருவரும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிகிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
