புல்மோட்டையில் பிக்கு அடாவடி : பொதுமக்களுக்கு பகிரங்க அச்சுறுத்தல்(Video)
புல்மோட்டை அரிசிமலை பகுதியில் முஸ்லிம் விவசாயிகளுக்கு சொந்தமான காணிகளை அபரிக்கும் முயற்சியில் அங்குள்ள பனாமுரே திலகவங்ச என்ற தேரர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை(22) குறித்த தேரர், அவரது சகோதரருடன் அந்த பிரேதசத்திற்குச் சென்று டோசர் இயந்திரங்களைக் கொண்டு காணிகளை அபரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு அட்டகாசம் செய்துள்ளார்.
இதன்போது எதிர்ப்பு தெரிவித்தவர்களை அச்சுறுத்தும் வகையிலும் பௌத்த பிக்குவும் அவரது சகோதரரும் செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விகாரை அமைக்கும் பிக்கு
இதேவேளை, புல்மோட்டை அரிசிமலை பகுதியில் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரின் ஆதரவோடு புதிதாக பௌத்த விகாரை ஒன்றையும் குறித்த பிக்கு அமைத்து வருவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை புல்மோட்டை பகுதியில் உள்ள புல்மோட்டை இல 01 கிராம அலுவலர் பிரிவில் உள்ள 06 முஸ்லிம் குடும்பங்களுக்கு சொந்தமான விவசாய காணிகளை, டோசர் இயந்திரங்களை கொண்டு அபகரிக்கும் நடவடிக்கைகளில் குறித்த பிக்கு ஈடுபட்டுள்ளார்.
இதனையறிந்த காணி உரிமையாளர்கள் தமது காணிக்குள் சென்று அத்துமீறல், அபகரிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவதை நிறுத்துமாறும் காணிக்கான ஆவணங்கள் தம்மிடம் உள்ளன என்றும் பாரம்பரியமாக தாம் விவசாயம் செய்துவரும் நிலங்களை விட்டு வெளியேறுமாறும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மக்கள் எதிர்ப்பு
இதன்போது டோசர் இயந்திரத்தோடு அப்பகுதிக்கு வந்து அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பௌத்த பிக்கு இந்த பகுதி பௌத்த விகாரைக்கு சொந்தமான பகுதி என்று தெரிவித்ததோடு, இந்த காணி வர்த்தமானியில் பௌத்த விகாரைக்கான இடம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
எனினும், காணி உரிமையாளர்கள் இது தமது பூர்வீக காணி என தெரிவித்து, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன்போது டோசர் இயந்திரத்தின் சாரதியான பௌத்த பிக்குவின் சகோதரர் சம்பத் என்பவர் டோசர் இயந்திரத்தின் முன்பகுதியால் காணி அபகரிப்புக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய பெண்களை மோதும் விதமாக அச்சுறுத்தியுள்ளார்.
அவ்வேளை, டோசர் இயந்திரத்தின் முன்பகுதியால் மோதுண்டு காணி உரிமையாளரான சம்சுதீன் சுலைகா (42) என்ற பெண் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரிசிமலை பௌத்த பிக்குவின் ஆதரவில் பல்வேறு பௌத்த பிக்குகள் இணைந்து குச்சவெளி பிரதேச செயலர் பிரிவில் தொடர்ச்சியாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகளை அபகரித்து, பௌத்த விகாரைகளை அமைத்துவருவதோடு பௌத்த விகாரைகளுக்கு சொந்தமான காணிகள் என பல நூற்றுக்கணக்கான நிலங்களையும் அபகரித்து வருகின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
மேலதிக விபரங்கள் - பதுர்தீன் சியானா






பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
