யாழில் திலீபனின் நினைவிடத்தில் தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் அஞ்சலி(Video)
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று இன்று (24) அஞ்சலி செலுத்தினார்.
இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன் முதல் முறையாக இன்று
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த சந்தோஸ் நாராயணனை ஈழத்தின் நாதஸ்வர கலைஞர் பஞ்சமூர்த்தி குமரன் வரவேற்றார்.
மனைவியின் பூர்வீக இல்லம்
அதன் பின்னர் சந்தோஸ் நாராயணன் மற்றும் அவரது மனைவி மீனாட்சி உள்ளிட்டவர்கள் கோண்டாவில் உப்புடம் விநாயகர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியத்துடன் கோண்டாவிலில் அமைந்துள்ள சந்தோஸ் நாராயணன் மனைவியின் பூர்வீக இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு ரசிகர்கள் மற்றும் இசை கலைஞர்கள் சந்தோஸ் நாராயணனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சந்தோஸ் நாராயணன் அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் பாரிய இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ள நிலையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
