கொழும்பு துறைமுக நகரின் கடற்கரையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்
கொழும்பு துறைமுக நகரின் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கொழும்பு துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (23.09.2023) பிற்பகல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இறந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை

உயிரிழந்த நபர் 40 முதல் 45 வயதுடையவர் எனவும் 5 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் இறுதியாக நீல நிற டெனிம் காற்சட்டையை அணிந்திருந்தாக குறிப்பிடப்படுகிறது.
தற்போது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam